வெளிநாடு செல்லும் நண்பரை வழி அனுப்ப சென்றபோது சோகம் - 2 பேர் பலி


வெளிநாடு செல்லும் நண்பரை வழி அனுப்ப சென்றபோது சோகம் -  2 பேர் பலி
x
தினத்தந்தி 9 Aug 2025 11:46 PM IST (Updated: 9 Aug 2025 11:50 PM IST)
t-max-icont-min-icon

கார் - மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி,

லால்குடி பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் இன்று வெளிநாடு வேலைக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். அதைத்தொடர்ந்து இன்று காலை ஒரு காரில் அந்த வாலிபர் திருச்சி விமான நிலையத்துக்கு புறப்பட்டார். அவரை வழி அனுப்புவதற்காக அவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என 6 வாலிபர்கள் காரில் உடன் சென்றனர்.

இந்தக் கார் காலை 9.50 மணி அளவில் திருச்சி லால்குடி மெயின் ரோட்டில் சரஸ்வதி கல்லூரி அருகே வந்த போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காரில் பயணம் செய்த 5 பேர் பலத்த காயமடைந்தனர். இதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

1 More update

Next Story