'டிரம்ப் அறிவிப்பு புரியாத புதிராக இருக்கிறது' - திருமாவளவன்


டிரம்ப் அறிவிப்பு புரியாத புதிராக இருக்கிறது - திருமாவளவன்
x

தாக்குதல் நிறுத்த அறிவிப்பை இந்திய அரசு அல்லது பாகிஸ்தான் அரசு செய்திருக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்தார்.

திருச்சி,

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான தாக்குதல் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு புரியாத புதிராக உள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

"பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை கட்சி வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் ஆதரித்தோம். ஆனாலும் இந்தியா-பாகிஸ்தான் இடையே பெரிய அளவிலான போர் மூண்டுவிடக் கூடாது எனவும் வலியுறுத்தினோம்.

இந்த சூழலில் போர் நிறுத்தம் தொடர்பான தகவல் ஆறுதலை தருகிறது. ஆனால் அந்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. இந்த அறிவிப்பை இந்திய அரசு அல்லது பாகிஸ்தான் அரசு செய்திருக்க வேண்டும்.

இருப்பினும் அமெரிக்கா தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதை நாம் வரவேற்கிறோம். இரண்டு நாடுகளுக்கு இடையில் அமைதியும், சமாதானமும் நிலவ வேண்டும் என ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரும் விரும்புகிறோம்."

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

1 More update

Next Story