தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் - அண்ணாமலை வரவேற்பு


தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் - அண்ணாமலை வரவேற்பு
x

டிடிவி தினகரனின் அனுபவமும், வியூகங்களும் திமுக ஆட்சியை அகற்ற, முக்கியப் பங்கு வகிக்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைகிறது என்ற செய்தி, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அமமுக பொதுச்செயலாளர், அன்பு அண்ணன் டிடிவி தினகரனுக்கு, எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணன் டிடிவி தினகரனின் ஆழ்ந்த அரசியல் அனுபவமும், தேர்ந்த வியூகங்களும், வரும் சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற, முக்கியப் பங்கு வகிக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story