மதுரையில் நாளை த.வெ.க. மாநாடு

த.வெ.க. 2-வது மாநில மாநாடு மதுரையில் நாளை நடைபெற உள்ளது.
மதுரை,
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. இந்த நிலையில் அக்கட்சியின் 2-வது மாநில மாநாடு மதுரையில், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பகுதியான பாரபத்தியில் நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது.
இதற்காக 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, மாநாட்டுக்கான ஏற்பாடு மும்முரமாக நடந்து வருகிறது. குறிப்பாக, மாநாட்டு மேடை, இருக்கைகள், மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மீதம் உள்ள பணிகளை ஏற்பாட்டு குழுவினர் இரவு, பகலாக செய்து வருகின்றனர். அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகிய தலைவர்களுடன் விஜய் இருப்பது போன்ற படங்கள், மேடையின் உச்சியில் இடம்பெற்றுள்ளன.
Related Tags :
Next Story






