தவெக நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கியது...முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு


தவெக நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கியது...முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு
x
தினத்தந்தி 29 Oct 2025 10:42 AM IST (Updated: 29 Oct 2025 10:51 AM IST)
t-max-icont-min-icon

28 பேர் அடங்கிய புதிய நிர்வாகக் குழுவை நியமித்து விஜய் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை ,

தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில், மக்கள் சந்திப்பை முன்னெடுத்து வந்த தவெகவுக்கு கரூர் நிகழ்வு தீரா வலியை ஏற்படுத்தி விட்டது. அந்த சோக நிகழ்வில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக தவெக மீண்டு வருகிறது. கட்சிப்பணிகளை தொடங்க மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் உத்தரவிட்டு இருக்கிறார். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்சி பணியாற்ற வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க, 28 பேர் அடங்கிய புதிய நிர்வாகக் குழுவை நியமித்து விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில் என் .ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவில்லை

இந்த கூட்டத்தில் விஜய்யின் சுற்றுப்பயணத்தை மீண்டும் தொடங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாகவும், தவெகவின் அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

1 More update

Next Story