கூட்டணி நிலைப்பாடு குறித்து தவெக நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம்


கூட்டணி நிலைப்பாடு குறித்து தவெக நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம்
x

விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன்தான் கூட்டணி என நிர்மல் குமார் கூறினார். கூட்டணி என நிர்மல் குமார் கூறினார்.

மதுரை,

எஸ்.ஐ.ஆர்.-ஐ எதிர்த்து தவெக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பங்கேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பேசியதாவது;

”யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு அழைக்கலாம். ஆனால் தவறான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. அதிமுக என்ற ஆட்சியில் இல்லாத கட்சியை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. எங்கள் கொள்கை எதிரி பாஜக என ஏற்கனவே சொல்லிவிட்டோம். எனவே பாஜகவோடு இருக்கும் எந்தக் கட்சியோடும் கூட்டணி அமைக்க 1 சதவிகிதம் கூட வாய்ப்பு இல்லை. எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

எங்கள் முதல்வர் வேட்பாளர் விஜய் தான். விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன்தான் கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளோம். கூட்டணி குறித்து ராகுல் காந்தி விஜய்யிடம் பேசினார் என்பது புரளியே. அப்படி பேசினால் நாங்கள் அதை பொதுவெளியில் தெரிவிப்போம்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story