த.வெ.க. புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

த.வெ.க. நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்த புதிய பொறுப்பாளர்களை நியமிப்பதாக விஜய் தெரிவித்துள்ளார்
சென்னை,
தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். த.வெ.க. நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்த புதிய பொறுப்பாளர்களை நியமிப்பதாக விஜய் தெரிவித்துள்ளார் .
அதன்படி, தவெக துணை பொதுச் செயலாளராக இருந்த நிர்மல்குமார் இணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கொள்கை பரப்பு செயலாளராக இருந்த ராஜ்மோகன் ஊடக அணி துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், விஜயலட்சுமி, அருள்பிரகாசம், ஸ்ரீதரன், சுபத்ரா ஆகியோர் தவெக துணை பொதுச் செயலாளராக புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story






