திருப்புவனம் அஜித்குமார் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய தவெக தலைவர் விஜய்


திருப்புவனம் அஜித்குமார் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய தவெக தலைவர் விஜய்
x
தினத்தந்தி 2 July 2025 7:56 PM IST (Updated: 2 July 2025 8:07 PM IST)
t-max-icont-min-icon

போலீசார் நடத்திய தாக்குதலில் திருப்புவனம் அஜித்குமார் உயிரிழந்தார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார். இவர் தனது நகைகளை திருடிவிடதாக நிகிதா என்ற பெண் போலீசில் புகார் அளித்தார். புகார் தொடர்பாக அஜித்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது அஜித்குமாரை போலீசார் கடுமையாக தாக்கினர். இந்த தாக்குதலில் அஜித்குமார் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தாக்குதல் நடத்திய போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், போலீசாரால் அடித்துக்கொல்லப்பட்ட திருப்புவனம் அஜித்குமார் வீட்டிற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரில் சென்றார். வீட்டில் வைக்கப்பட்டிருந்த அஜித்குமார் புகைப்படத்திற்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார்.

1 More update

Next Story