சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் தவெகவினர் இன்று ஆர்ப்பாட்டம்


சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் தவெகவினர் இன்று ஆர்ப்பாட்டம்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 16 Nov 2025 3:30 AM IST (Updated: 16 Nov 2025 7:10 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் சிவானந்தா சாலையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பங்கேற்று பேசுகிறார்.

சென்னை

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தவெக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இதற்காக தவெக மாவட்ட செயலாளர்கள் முறையாக போலீஸ் அனுமதி பெற்றுள்ளனர். மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. காலை 10 மணிக்கு நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பங்கேற்று பேசுகிறார்.

அமைப்பு ரீதியாக சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த 13 மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்காணவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நடக்கிறது. மாவட்ட, ஒன்றிய, அணி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று த.வெ.க. அறிவுறுத்தியுள்ளது.

1 More update

Next Story