தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை


தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை
x
தினத்தந்தி 25 May 2025 3:19 PM IST (Updated: 25 May 2025 3:54 PM IST)
t-max-icont-min-icon

கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு இளைஞர் அணியினர் பாடுபடவேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

திருச்சி,

தமிழக துணை முதலமைச்சரும், தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார். இன்று திருச்சி தனியார் ஓட்டலில் நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், கருணாநிதி பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் எனவும், வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. இளைஞர் அணியினர் தீவிர களப்பணி ஆற்ற வேண்டும் என்றும், மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைத்து முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வருவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் பேசிய அவர், தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நல திட்டங்களை வீடு வீடாக கொண்டு மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், பூத் கமிட்டிகளை வலுப்படுத்தி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு இளைஞர் அணியினர் பாடுபடவேண்டும் என்றும் கூறினார். கூட்டத்தில் இளைஞர் அணி நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

1 More update

Next Story