விஜய் தலைமையில் 2026 ஜனநாயகப் புரட்சியைச் சந்திக்க உள்ளது - ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாடு முழுவதும் தொடங்கவுள்ள மக்கள் சந்திப்பு, மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவுரை எழுதப்போகிறது என தெரிவித்துள்ளார்.
சென்னை,
தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கொள்கைத் தலைவர்களையும் மாநில உரிமைகளின் முன்னோடிகளையும் கண்ட தமிழ்நாடு, அந்த அடிப்படை அரசியலிலிருந்து விலகிய காலத்தில் எல்லாம் மாபெரும் புரட்சியைக் கண்டது. 1967-ம் ஆண்டின் சாமானிய புரட்சி, 1977-ம் ஆண்டின் சரித்திரப் புரட்சி என்ற வரிசையில் 2026-ம் ஆண்டு மக்கள் தலைவர் விஜய் தலைமையில் ஜனநாயகப் புரட்சியைச் சந்திக்க உள்ளது. மக்களுக்காக, மக்களில் ஒருவராக, மக்கள் தலைவர் நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் தொடங்கவுள்ள மக்கள் சந்திப்பு, மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவுரை எழுதப்போகிறது.
'உங்க விஜய் நா வரேன்,
வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு!' என்ற பிரசார முழக்கம் இனி உலகம் முழுக்க ஒலிக்கட்டும்!.. என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






