மத்திய மந்திரி அமித்ஷா 25-ந்தேதி கோவை வருகை

ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் அமித்ஷா பங்கேற்கிறார்.
மத்திய மந்திரி அமித்ஷா 25-ந்தேதி கோவை வருகை
Published on

கோவை,

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா வருகிற 26-ந்தேதி மாலை நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, விமானம் மூலம் வருகிற 25-ந்தேதி இரவு 7 மணிக்கு கோவை வருகிறார். அன்று இரவு கோவை அவினாசி ரோடு நவ இந்தியா அருகே உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.

கோவை பீளமேட்டில்25 சென்ட் பரப்பளவில் 12 ஆயிரம் சதுரஅடியில் கட்டப்பட்டுள்ள பா.ஜனதா கட்சி அலுவலகத்தை 26-ந்தேதி காலை 10.30 மணிக்கு அமித்ஷா திறந்து வைக்கிறார். இதையடுத்து பகல் 1 மணிக்கு பா.ஜனதா மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா கலந்துகொள்கிறார்.

மாலை 5.30 மணிக்கு ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார். இரவு 8 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். கோவை வரும் அமித்ஷாவுக்கு பா.ஜனதா சார்பில் விமான நிலையம் மற்றும் கட்சி அலுவலகம் ஆகிய பகுதிகளில் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

அமித்ஷா வருகையையொட்டி கோவை மாவட்ட மற்றும் மாநகர போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com