அமெரிக்காவின் வரி விதிப்பு; பொருளாதாரத்தை பாதுகாக்க வணிகர்கள் தோள் கொடுப்போம் - விக்கிரமராஜா

இந்தியாவிற்கு எதிரான அதிகார அத்துமீறலை அமெரிக்கா வெளிப்படையாக பிரதிபலிக்கிறது என விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“இந்திய பொருட்களுக்கான இறக்குமதி வரியை 500 சதவீதம் உயர்த்தி அறிவித்திட அமெரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது முழுக்க, முழுக்க அமெரிக்க அதிபரின் ஏகாதிபத்திய எண்ணத்தையும், செயலையும், இந்தியாவிற்கு எதிரான தனது அதிகார அத்துமீறலை வெளிப்படையாக பிரதிபலிப்பதாகவே தெரிகின்றது.
அமெரிக்க அதிபரின் ஏகாதிபத்திய 500 சதவீத வரி விதிப்புக்கும், நடவடிக்கைக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்து கொள்கிறோம். தேசத்தின் பொருளாதாரத்தை பாதுகாக்க இந்திய வணிகர்கள் தேசத்திற்கு தோள் கொடுப்போம். தேசத்தை பாதுகாத்திட என்றும் வணிகர்கள் அரசோடு துணை நிற்பார்கள்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story






