ஈரோட்டில் வேன் கவிழ்ந்து விபத்து - வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற போது சோகம்

லாரியை முந்த முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் டிராவல்ஸ் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வேன் அதே சாலையில் சென்றுகொண்டிருந்த லாரியை முந்திச்செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக வேன் லாரி மீது வேன் உரசி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் வேன் சாலையின் நடுவே கவிழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்துக்குள்ளான வேனில் 15 நபர்கள் பயணம் செய்ததாகவும், அதில் 6 பேர் காயமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனிடையே விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் சாலையின் நடுவே கவிழ்ந்த வேனை மீட்புக்குழுவினர் கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தினர்.
வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றபோது வேன் விபத்துக்குள்ளாகி 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






