பட்டா வழங்க ரூ. 75 ஆயிரம் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. கைது

கைது செய்யப்பட்ட வி.ஏ.ஓ.விடம் விசாரணை நடைபெற்று வருகிறது
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வீரகநல்லூர் கிராமம் உள்ளது. இங்கு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கோடீஸ்வரி. இவர் பகுதியில் உள்ள இடங்களுக்கு கணினி பட்டா வழங்க அந்த கிராமத்தில் உள்ள 25 குடும்பங்களிடம் லஞ்சம் பெற்றுள்ளார். ரூ. 3 ஆயிரம் வீதம் 25 குடும்பங்களை சேர்ந்தவர்களிடமிருந்து ரூ. 75 ஆயிரம் லஞ்சமாக பெற்றுள்ளார்.
இந்நிலையில், வி.ஏ.ஓ. கோடீஸ்வரி மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கணினி பட்டா வழங்க லஞ்சம் பெற்றபோது கோடீஸ்வரியை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து, வி.ஏ.ஓ. கோடீஸ்வரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






