சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்ட வலியுறுத்தி விசிக சார்பில் புல்லட் பேரணி


சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்ட வலியுறுத்தி விசிக சார்பில் புல்லட் பேரணி
x
தினத்தந்தி 28 Feb 2025 3:36 PM IST (Updated: 1 March 2025 6:14 AM IST)
t-max-icont-min-icon

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மதுரையில் புல்லட் பேரணி நடைபெற்றது.

மதுரை,

சிவகங்கையில் பட்டியலின மாணவர் புல்லட் ஓட்டியதற்காக 3 பேர் கொண்ட கும்பல் அவரின் கைகளை வெட்டியது. படுகாயமடைந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மாணவனின் கைகளை வெட்டிய 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சாதிய தீண்டாமை வன்கொடுமையைக் கண்டித்தும், சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்ட வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மதுரையில் இன்று புல்லட் பேரணி நடைபெற்றது. மதுரை நீதிமன்ற பகுதியில் இருந்து காந்தி அருங்காட்சியகம் வரை இந்த புல்லட் பேரணி நடைபெற்றது. இதில் விசிகவை சேர்ந்தஏராளமானோர் புல்லட் மோட்டார்சைக்கிளில் கலந்து கொண்டனர்.


Next Story