வேலூர்: கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1,800 மது பாக்கெட்டுகள் பறிமுதல் - ஒருவர் கைது

பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த அகமது பாஷா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்,
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பேரணாம்பட்டு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் கர்நாடக மாநிலத்தில் இருந்து சட்டவிரோதமாக மது பாக்கெட்டுகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான 1,800 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடர்பாக பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த அகமது பாஷா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






