வேலூர்: அரசினர் பாதுகாப்பு இடத்தில் இருந்து சிறுவன் தப்பியோட்டம்

அரசினர் பாதுகாப்பு இடத்தில் இருந்து தப்பியோடிய சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர்,
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே காகித பட்டறை சாலையில் தமிழக சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் அரசினர் பாதுகாப்பு இடம் செயல்பட்டு வருகிறது. குற்றசெயல்களில் ஈடுபட்ட 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் இங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இங்கு தங்கவைப்பட்டிருந்த ஒரு சிறுவன் இன்று நண்பகல் நேரத்தில் தப்பியோடிவிட்டதாக அரசினர் பாதுகாப்பு இடத்தில் இருந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக வேலூர் டி.எஸ்.பி. பிரித்விராஜ் சவுகான் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து தப்பியோடிய சிறுவனை கண்டறிய வேலூர் எஸ்.பி. மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.
தப்பியோடிய சிறுவன் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு அரசினர் பாதுகாப்பு இடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த புதிய பேருந்து நிலையம், காட்பாடி ஜங்ஷன் உள்ளிட்ட இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






