வேலூர்: திடீரென தீப்பற்றி எரிந்த தனியார் கல்லூரி பஸ்

விடுமுறை நாள் என்பதால் இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்ல.
வேலூர் காட்பாடி அடுத்து ஆர்காடு பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வந்தது. கல்லூரிக்கு சொந்தமான பஸ் ஒன்று கல்லூரிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. விடுமுறை நாள் என்பதால் வெள்ளிக்கிழமை நிறுத்தி விட்டு திங்கட்கிழமை பஸ்சை இயக்குவது வழக்கம். இந்நிலையில் நிறுத்தி விடப்பட்டிருந்த பஸ்சில் இன்று மதியம் 12 மணியளவில் திடீரென தீ ஏற்பட்டது. இதைக் கண்டவர்கள் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்த காட்பாடி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அரைமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் இன்று விடுமுறை நாள் என்பதால் இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்ல. இந்த தீ விபத்தில் பஸ் முற்றிலும் சேதமடைந்தது.
திடீரென கல்லூரி பஸ் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






