வேலூர்: காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறிப்பு - இருவர் கைது


வேலூர்: காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறிப்பு - இருவர் கைது
x

காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி அருகே புதுவசூர் தீர்த்தகிரி மலைக்கு வரும் காதல் ஜோடிகளை மிரட்டி மர்ம நபர்கள் நகை, பணம் உள்ளிட்டவற்றை பறித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனிடையே வழிப்பறி கொள்ளையர்கள் பேசும் ஆடியோ வெளியான நிலையில், வழிப்பறியில் ஈடுபட்டு வந்த அய்யனார், விநாயகம் ஆகிய இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதில் அய்யனார் என்பவரின் வீட்டில் 50 டெட்டனேட்டர் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story