தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி நாளை தொடக்கம்

பெல் நிறுவன பொறியாளர்கள் சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதல்நிலை சரிபார்ப்பு பணி நாளை தொடங்கி, ஜனவரி 24-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் சுமார் ஒன்றரை லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரிலும் கடந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சரிபார்ப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுக்கப்பட்டு சரிபார்ப்பு பணிகள் தொடங்கப்படும். பெல் நிறுவன பொறியாளர்கள் சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
Related Tags :
Next Story






