பசும்பொன் தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி மரியாதை

இன்று தேவர் ஜெயந்தி விழா அரசு விழாவாக நடைபெற்று வருகிறது
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி மரியாதை
Published on

  ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது.

இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை அரசு விழாவாக நடைபெற்று வருகிறது. இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு நினைவாலயத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். அவருடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com