'வார்ரூம்' மூலம் நிர்வாகிகளை கண்காணிக்கும் விஜய்


வார்ரூம் மூலம் நிர்வாகிகளை கண்காணிக்கும் விஜய்
x
தினத்தந்தி 10 Nov 2025 5:30 AM IST (Updated: 10 Nov 2025 5:30 AM IST)
t-max-icont-min-icon

கட்சிக்கு தேர்தல் சின்னம் பெறும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது

சென்னை,

சட்டசபை தேர்தலை சந்திக்க தவெக முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்காக மாநில, மாவட்ட நிர்வாகிகளை கொண்ட நிர்வாக குழுவை விஜய் அமைத்துள்ளார். இந்த குழுவில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில நிர்வாகிகளான ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், அருண்ராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் மாவட்ட அளவில் நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு, கட்சி தொடர்பான தகவல்களை சேகரித்து விஜய்க்கு வழங்குகிறார்கள். இதற்கிடையே கட்சிக்கு தேர்தல் சின்னம் பெறும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்தை தவெக அணுகியுள்ளது. இ-மெயில் மூலம் அதற்கான விண்ணப்ப படிவம் அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தநிலையில், நிர்வாகக்குழு நிர்வாகிகளை கொண்டு விஜய்யின் நேரடி கண்காணிப்பில் ‘வார் ரூம்’ (கட்டளை அறை) அமைக்கப்பட்டுள்ளது. இந்த ‘வார் ரூம்’ மூலம் உடனுக்குடன் கட்சி நிர்வாகிகளின் அன்றாட செயல்பாடுகளை விஜய் கண்காணித்து வருகிறார்.இங்கு சுமார் 100 பேர் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இதற்கான அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது.

மாவட்ட செயலாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டசபை தொகுதிகளில் நிலவும் மக்கள் பிரச்சினை, மற்ற கட்சிகளின் செயல்பாடுகள், மக்கள் கருத்துகளை இந்த கண்காணிப்பு கட்டளை அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.இதற்கிடையே, மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர் போராட்டங்களை நடத்த நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.

1 More update

Next Story