2026-ல் விஜய் முதல்-அமைச்சராக அமர்வார் - ஆனந்த் பேச்சு


2026-ல் விஜய் முதல்-அமைச்சராக அமர்வார் - ஆனந்த் பேச்சு
x

விஜய் பேச்சுக்காக 5 கோடி மக்கள் காத்திருப்பதாக ஆனந்த் பேசினார்.

சென்னை,

தவெக செயல் வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் பேசியதாவது;

2026ல் நாம் வெற்றிபெற வேண்டும். அதற்கு அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். விஜய் பேச்சுக்காக 5 கோடி மக்கள் காத்திருக்கின்றனர். தேர்தலின்போது பூத் ஏஜெண்டுகள் கடைசிவரை பூத்தில் இருக்க வேண்டும். பூத்தில் கடைசி நேரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. தவெக பூத் ஏஜெண்டுகள் வாக்குகளை பிரித்து போட அனுமதிக்க கூடாது. தேர்தலின்போது பணியாற்றும் நிர்வாகிகள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் கள்ல ஓட்டு போடுவதை நாம் தடுக்க வேண்டும்.

தொண்டர்கள் மட்டுமல்ல.. பொதுமக்களே விசில் அடித்துக்கொண்டிருக்கிறார்கள். உழைப்பவர்களுக்குத்தான் பதவி கொடுப்பேன் என நம் தலைவர் நினைக்கிறார். தவெகவில் நிரப்பப்படாமல் உள்ள பதவிகள் விரைவில் நிரப்பப்படும். இனி நம்மைப்பற்றித்தான் பேசுவார்கள். 2026-ல் விஜய் முதல்-அமைச்சராக அமர்வார். அவரை முதல்-அமைச்சர் பதவியின் அமர வைப்பதற்காக அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story