திருச்சிக்கு புறப்பட்ட விஜய்யின் பிரசார வாகனம்


திருச்சிக்கு புறப்பட்ட  விஜய்யின் பிரசார வாகனம்
x

விஜய் மற்றும் கொள்கை தலைவர்களின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

சென்னை,

வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நாளை (சனிக்கிழமை) முதல் திருச்சியில் இருந்து தனது அரசியல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கி மக்களை சந்திக்கிறார். அன்றைய தினம் மாலை அரியலூர், குன்னம், பெரம்பலூரில் விஜய் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக விஜய் நாளை காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வருகிறார்.

திருச்சியில் சத்திரம் பஸ் நிலையத்தில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி தர வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனரிடம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மனு கொடுத்திருந்தார்.ஆனால் அங்கு அனுமதி தர மறுத்த போலீசார் திருச்சி மரக்கடை பகுதியில் எம்.ஜி.ஆர். சிலை அருகே விஜய் பேசுவதற்கு 23 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கினர்.

சுற்றுப் பயணத்துக்காக நவீன வசதிகளுடன் தயார் செய்யப்பட்ட வாகனத்தில் , கட்சி கொடி நிறத்தில் முழுவதுமாக மாற்றி, அதில் விஜய் மற்றும் கொள்கை தலைவர்களின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இருந்து பிரசார வாகனம் திருச்சிக்குப் புறப்பட்டது. இந்த பிரசார வாகனம் விக்கிரவாண்டி வந்த போது வாகனத்திற்கு தவெக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

1 More update

Next Story