உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு ஊர் மக்கள் மரியாதை - மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்

பெண்கள் வெள்ளை நிற புடவை அணிந்து வந்து காளைக்கு அஞ்சலி செலுத்தினர்.
மதுரை,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு, ஊர் மக்கள் அனைவரும் கூடி வந்து இறுதி மரியாதை செலுத்தினர். அதோடு பட்டாசுகள் வெடித்து, ஆடல் பாடலுடன், கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி மிகுந்த மரியாதையுடன் ஜல்லிக்கட்டு காளையை நல்லடக்கம் செய்தனர்.
இறுதி மரியாதை செலுத்த வந்த ஆண்கள் மேல் சட்டை அணியாமலும், பெண்கள் வெள்ளை நிற புடவை அணிந்தும் காளையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இல்லத்தில் ஒருவர் இறந்த துக்கத்தைப் போல் ஜல்லிக்கட்டு காளை உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிப்பதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு காளைக்கு ஊர் மக்கள் சேர்ந்து இறுதி மரியாதை செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story






