தெற்கு ரெயில்வேயின் கூடுதல் பொது மேலாளராக விபின் குமார் பொறுப்பேற்பு


தெற்கு ரெயில்வேயின் கூடுதல் பொது மேலாளராக விபின் குமார் பொறுப்பேற்பு
x

இதற்கு முன்பு வட மத்திய ரெயில்வேயின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார்.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தெற்கு ரெயில்வேயின் கூடுதல் பொது மேலாளராக விபின் குமார் நேற்று பெறுப்பேற்றுக்கொண்டார். இவர் இந்திய ரெயில்வேயில் என்ஜினீயராக 1988-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். தென்மத்திய ரெயில்வே, வடக்கு ரெயில்வே, தென்மேற்கு ரெயில்வே, தென் கிழக்கு ரெயில்வே, வட மத்திய ரெயில்வேயில் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றியுள்ளார். ரெயில்வே, மெட்ரோ ரெயில்வே, நெடுஞ்சாலை, சுரங்கப் பாதைகள் போன்ற துறைகளில் கொண்டுவரப்பட்ட பெரிய திட்டங்களை தலைமை தாங்கி திறமையாக பணியாற்றி இருக்கிறார். தெற்கு ரெயில்வேயின் கூடுதல் பொது மேலாளராக பொறுப்பேற்பதற்கு முன்பு வட மத்திய ரெயில்வேயின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story