மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 1.10 லட்சம் கன அடியாக அதிகரிப்பு


மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 1.10 லட்சம் கன அடியாக அதிகரிப்பு
x

காவிரி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்ளுக்கு செல்லும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

சேலம்,

கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பருவமழை காரணமாக கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், காவிரி கரையோர கரையோர மக்களுக்கு கர்நாடக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1,15,000லிருந்து 1,25,000 கன அடியாக உயர்ந்துள்ளது.

இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியும் 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 92 ஆயிரம் கன அடியும் வெளியேற்றப்படுவதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. மொத்தமாக அணையில் இருந்து 1.10 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து காவிரி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்ளுக்கு செல்லும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

1 More update

Next Story