டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு


டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
x

தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர்,

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் டெல்டா பாசன பகுதிகளில் பெய்த மழை நின்றதால் பாசனத்திற்கான தண்ணீர் தேவை அதிகரித்தது. இதையடுத்து அணையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனிடையே டெல்டா பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை மேலும் அதிகரித்ததால் நேற்று முதல் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசன தேவைக்கு தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 118.99 அடியாக இருந்தது.

1 More update

Next Story