குடியரசு தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய விருதுகள் என்னென்ன...?


குடியரசு தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய விருதுகள் என்னென்ன...?
x
தினத்தந்தி 26 Jan 2026 10:01 AM IST (Updated: 26 Jan 2026 10:02 AM IST)
t-max-icont-min-icon

மத நல்லிணத்திற்கான கோட்டை அமீர் விருதை திருப்பூரை சேர்ந்த கலி முல்லா பெற்றார்.

சென்னை,

77-வது குடியரசு தினம் நாடுமுழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது, காந்தியடிகள் காவலர் பதக்கம் உள்ளிட்ட விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அதன்விவரம் பின்வருமாறு:-

வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம்:-

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தீயணைப்புத்துறை ஓட்டுனர் சங்கர்.

தீயணைப்பு துறையைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் ரமேஷ்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த பீட்டர் ஜான்சன்.

கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது:-

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கலிமுல்லா

சிறந்த நெல் சாகுபடிக்கான நாராயணசாமி நாயுடு விருது:-

தஞ்சாவூரைச் சேர்ந்த விவசாயி க.வீரமணி

சிறந்த காவல் நிலையத்திற்கான விருது:-

முதல் பரிசு மதுரை மாநகரம்

இரண்டாவது பரிசு திருப்பூர் மாநகரம்

மூன்றாவது பரிசு கோயம்புத்தூர் மாவட்டம்

காந்தியடிகள் காவலர் பதக்கம்:-

* விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் நடராஜன்

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சத்யாநந்தன்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன்

கடலூர் மாவட்டம் புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நடராஜன்

சேலம் மாவட்டம் மத்திய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் கண்ணன்

1 More update

Next Story