நாகையில் விஜய் பரப்புரைக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்னென்ன?

நாகையில் விஜய் பரப்புரை மேற்கொள்ள காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது
சென்னை,
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் கடந்த 13-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அந்த வகையில், நாளை (சனிக்கிழமை) நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். நாகையில் விஜய் பரப்புரை மேற்கொள்ள காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது .அதன்படி,
* மதியம் 12:25 முதல் 1 மணிக்குள் நிகழ்ச்சியை முடித்திட வேண்டும்.
* பரப்புரையின் போது வரக்கூடிய வாகனங்களுக்கு தாங்களே பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
* வரவேற்பு கொடுக்க உள்ள வாஞ்சூர் ரவுண்டானா பகுதி தமிழ்நாடு புதுச்சேரி எல்லை என்பதால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது.
*பெண்கள் மற்றும் பெரியவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளாத வண்ணம் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
*பரப்புரையில் யாரும் கம்பு, குச்சி, பிற ஆயுதங்கள் வைத்திருத்தல் கூடாது.
*அரசு மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது; அப்படி ஏற்படுத்தினால் அதற்கு கட்சியினரே பொறுப்பேற்க வேண்டும்.
*புத்தூர் அண்ணா சிலை பகுதியில் ரெயில்வே கேட் இருப்பதால் ரெயில் பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது.
*உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தேசிய நெடுஞ்சாலையிலும் மற்ற சாலைகளிலும் இரு புறங்களிலும் விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது
*விஜய் செல்லும் பரப்புரை வாகனத்தின் பின்னால் ஐந்து வாகனங்களுக்கு மேல் செல்லக்கூடாது. அந்த வாகனத்தின் முன்பாகவோ பின்பாகவோ இரு சக்கர வாகனம், காரோ செல்லக்கூடாது.
* அண்ணா, பெரியார் சிலை தடுப்புகள் மீது ஏறி இடையூறு செய்யக்கூடாது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.






