மதுரைக்கு என்ன செய்தீர்கள் முதல்-அமைச்சரே? - செல்லூர் ராஜு கேள்வி


மதுரைக்கு என்ன செய்தீர்கள் முதல்-அமைச்சரே? - செல்லூர் ராஜு கேள்வி
x

மதுரையில் இன்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 25 கிலோ மீட்டர் தூரம் ‘ரோடு ஷோ' சென்று பொதுமக்களை சந்திக்கிறார்.

சென்னை,

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை(1-ந் தேதி) மதுரையில் நடைபெறுகிறது. இதையொட்டி உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

இதற்கான பணிகள் கடந்த ஒரு மாதமாக மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான மூர்த்தி மேற்பார்வையில் நடந்து வருகிறது. இதில் பொதுக்குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை கழக நிர்வாகிகள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். 90 ஏக்கர் உள்ள இந்த திடலில் குளு, குளு ஏ.சி. வசதியும் செய்யப்பட்டு உள்ளது. உள்புறம் வண்ண வண்ண விளக்குகள் ஜொலிக்கின்றன.

சென்னை அண்ணா அறிவாலயம் போன்ற முகப்புத்தோற்றத்துடன் பொதுக்குழு நடைபெறும் அரங்கின் நுழைவு வாயில் அமைக்கப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி பெரியார், அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்களும், தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் பதாகைகளும் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் அரங்கின் முன்பு 100 அடி உயரத்தில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் பசுமையான புல்வெளிகள், பூத்துக்குலுங்கும் வண்ணமலர்களுடன் செயற்கை நீருற்றும் இடம்பெறுகிறது. தி,மு.க. பொதுக்குழுவில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் 1 மணி அளவில் மதுரை வருகிறார். மதுரையில் இன்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 25 கிலோ மீட்டர் தூரம் 'ரோடு ஷோ' சென்று பொதுமக்களை சந்திக்கிறார்.

இந்தநிலையில்,அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-மதுரை வரும் முதல்-அமைச்சரே, நீங்கள் நடக்க புதிய ரோடுகள், ஆனால் மக்கள் நடப்பது? 2022இல் ரூ.280 கோடியில் ஸ்டாலின் அறிவித்த ஐடி பார்க் திட்டம் எங்கே? திட்டமிடலே இல்லாத மேம்பாலங்களால் மதுரையில் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை என பதிவிட்டுள்ளார்.


1 More update

Next Story