விஜய் பிரசார வாகனத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் ஒப்படைக்கப்படுமா? த.வெ.க. நிர்வாகி அருண்ராஜ் பேட்டி


விஜய் பிரசார வாகனத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் ஒப்படைக்கப்படுமா?  த.வெ.க. நிர்வாகி அருண்ராஜ் பேட்டி
x

எங்களிடம் இருந்த ஆதாரங்களைக் கண்டிப்பக சி.பி.ஐ-யிடம் கொடுப்போம் என்று அருண் ராஜ் கூறினார்.

கரூர்,

த.வெ.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ் கூறியதாவது:-

“நாங்கள் பாரபட்சமற்ற விசாரணையைக் கேட்டிருந்தோம். உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் எனக் கேட்டிருந்தோம். நாங்கள் சி.பி.ஐ. விசாரணை கேட்கவில்லை. மற்ற மனுதாரர்கள் சி.பி.ஐ. விசாரணை கேட்டிருந்தார்கள். ஆனால், உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி, அதை கண்காணிக்க உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவை நியமித்திருக்கிறார்கள். இது பெரிய மகிழ்ச்சி என்று சொல்ல முடியாது. ஆனால், நாங்கள் மகிழ்ச்சி. ‘நீதி வெல்லும்’ என்ற நம்பிக்கை இருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தவர்கள் மீது நிறைய சந்தேகங்கள் எழுந்துள்ளதாக கூறுகின்றனர். அவர்கள் மனு தாக்கல் செய்தது எங்களுக்கு தெரியாது என்று கூறுகிறார்கள். சி.பி.ஐ. இதையும் விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம். எதனால், யார் தூண்டுதலின் பேரில் இதை செய்தார்கள், உண்மையாகவே அவர்களின் ஒப்புதல் இல்லாமல் இதை செய்திருக்கிறார்கள் என்றால், சி.பி.ஐ. விசாரிக்கட்டும். இதைப்பற்றி எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கே நிவாரணம் வழங்க வேண்டும் என்பதுதான் முதலில் அவருடைய எண்ணமாக இருக்கிறது. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மக்களுடன் வீடியோ கால் மூலம் பேசினார். இந்த வாரம் விஜய் கரூர் நேரில் சென்று மக்களை சந்திக்க இருக்கிறார். அதற்காக, கரூர் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மற்ற அதிகாரிகளுடன் பேசி, இடம் மற்றும் நேரத்தை நாங்கள் முடிவு செய்ய இருக்கிறோம்.

முடிவு செய்தவுடன் விஜய் கண்டிப்பாக நேரில் சென்று அவர்களைப் பார்ப்பார். சி.பி.ஐ.க்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம். எப்போது கூப்பிட்டாலும், நேரில் வரச் சொன்னால் எங்களுடைய சாட்சிகளைக் கொடுப்போம். எங்களிடம் இருக்கும் ஆதாரங்களையும் கண்டிப்பாக சி.பி.ஐ.யிடம் கொடுப்போம்.

‘வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டது ஜனநாயகன் படத்துக்காக எடுக்கப்பட்ட வீடியோ’ என்பது கீழ்த்தரமான, அருவருப்பான விமர்சனம். இதைக் கண்டிப்பாக யார் செய்திருந்தாலும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அதற்கான அவசியமும் தேவையும் எங்கள் தலைவருக்கு இல்லை.

சி.சி.டி.வி. பதிவுகளை விசாரணைக் குழுவிடம் கண்டிப்பாக கொடுப்போம். புஷ்சி ஆனந்த் இன்று வருகிறார்,” என அவர் கூறினார்.

1 More update

Next Story