அரசு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை அமைச்சர்கள் சாப்பிடுவார்களா.? - சீமான் கேள்வி


அரசு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை அமைச்சர்கள் சாப்பிடுவார்களா.? - சீமான் கேள்வி
x

பரந்தூரில் விமான நிலையம் கட்ட வேண்டும் என்பது பேராசை என சீமான் கூறினார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை தாம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

”வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கருதுபவன்தான் வீரன். வெற்றியடைந்தால் இருப்பேன்.. தோல்வியடைந்தால் சென்றுவிடுவேன் என்பவன் கோழை. எங்களுக்கு தெரியாத மூன்றெழுத்து பயம். எங்கள் பரம்பரைக்கே தெரிந்த மூன்றெழுத்து வீரம். 60 ஆண்டுகளாகியும் தலைநகரில் மழை வெள்ளம் வடிய ஏற்பாடு செய்யவில்லை. அரசு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை எந்த அமைச்சர்கள் சாப்பிடுவார்கள்?

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை. பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான் தான். மீனம்பாக்கம் விமான நிலையம் என்பது தேவை. பரந்தூரில் விமான நிலையம் கட்ட வேண்டும் என்பது பேராசை. அடர்த்தியான வறுமை, அறியாமை எனும் குழந்தையைப் பெறுகிறது. வறுமையும் அறியாமையும் சேரும்போது மறதி வருகிறது. இவை மூன்றும் இப்போதிருக்கும் அரசியல்வாதிகளுக்கு முதலீடாக மாறிவிடுகிறது. கட்சி மாறுபவர்களைப் பார்த்து மக்கள் கேள்வி கேட்பதில்லை. ”

இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story