அரசு மருத்துவமனையில் ஜன்னல் கண்ணாடி உடைப்பு; விபத்தில் உயிரிழந்தவரின் உறவினர்கள் ரகளை


அரசு மருத்துவமனையில் ஜன்னல் கண்ணாடி உடைப்பு; விபத்தில் உயிரிழந்தவரின் உறவினர்கள் ரகளை
x

மது போதையில் ரகளையில் ஈடுபட்ட 2 நபர்களை போலீசார் பிடித்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த விஜயராகவன்(வயது 30) என்பவர் புதுரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவருக்கு இன்று பிறந்தநாள் என்று கூறப்படுகிறது. இதையொட்டி எரியோடு பகுதியில் உள்ள இறைச்சி கடையில் கறி வாங்கிவிட்டு வீட்டிற்கு சென்றபோது, அவரது இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் விஜயராகவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்த விஜயராகவனின் உறவினர் ஒருவர், மது போதையில் அங்கிருந்து ஒரு இரும்பு கம்பியை எடுத்து மருத்துவமனையின் பிரசவ வார்ட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துள்ளார்.

அதே போல் இன்னொரு போதை ஆசாமி, பிரேத பரிசோதனை கூடத்தின் கதவை உடைக்க முயன்றார். து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேடந்தூர் போலீசார், மருத்துவமனை வளாகத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட 2 நபர்களை பிடித்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் வேடசந்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story