!-- afp header code starts here -->

சென்னை: ரிசர்வ் வங்கி வளாகத்தில் பெண் காவலரின் துப்பாக்கி எதிர்பாராமல் வெடித்ததால் பரபரப்பு


சென்னை: ரிசர்வ் வங்கி வளாகத்தில் பெண் காவலரின் துப்பாக்கி எதிர்பாராமல் வெடித்ததால் பரபரப்பு
x

கோப்புப்படம்

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி வளாகத்தில் பெண் காவலரின் துப்பாக்கி எதிர்பாராமல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கி வளாகம் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். இந்த நிலையில் இன்று அதிகாலையில் வங்கியின் உள்ளே திடீரென எச்சரிக்கை அலாரம் அடித்துள்ளது. உடனே பணியில் இருந்த ஆயுதப்படை பெண் காவலர் தர்ஷினி பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியில் தோட்டாக்களை லோடு செய்துள்ளார்.

பின்னர் வங்கி வளாகத்தை சுற்றிப் பார்த்த தர்ஷினி யாரும் இல்லை என்பதை உறுதி செய்தபிறகு, லோடு செய்த தோட்டாவை எடுக்க முயன்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்தது. தோட்டா சுவரில் பாய்ந்ததால் நல்வாய்ப்பாக பெண் காவலர் தர்ஷினி உயிர் தப்பினார். இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


1 More update

Next Story