சவுமியா அன்புமணி தலைமையில் மகளிர் உரிமை மீட்பு பயணம் இன்று தொடக்கம்


சவுமியா அன்புமணி தலைமையில் மகளிர் உரிமை மீட்பு பயணம்  இன்று தொடக்கம்
x

அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு முழுவதும் 108 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டார்.

சென்னை,

‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு முழுவதும் 108 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அன்புமணி மனைவி டாக்டர் சவுமியா அன்புமணி, ‘தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். இவர் பா.ம.க.வின் துணை அமைப்பான பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக உள்ளார்.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு கிடைக்காமல் இருக்கும் 10 முக்கிய உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கும், தமிழ்நாட்டில் பெண்களின் நிலையை உயர்த்திடுவதற்கும் விழிப்புணர்வு பிரசார பயணமாக சவுமியா அன்புமணியின் சுற்றுப்பயணம் இருக்கும் என பா.ம.க. சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பயணத்தை சவுமியா அன்புமணி தலைமை தாங்கி காஞ்சீபுரம் மாவட்டம் காமராஜர் சாலையில் உள்ள சித்தீஸ்வரர் மஹாலில் இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறார்.

1 More update

Next Story