காதலியை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசம்; திருமணத்துக்கு மறுப்பு - வாலிபர் கைது

பட்டதாரி பெண்ணை ரமேஷ் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
காதலியை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசம்; திருமணத்துக்கு மறுப்பு - வாலிபர் கைது
Published on

கடலூர்,

சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் மணலூர் மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் மகன் மகேஷ் (வயது 22). இவரும், காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த 25 வயது பட்டதாரி பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

அப்போது மகேஷ், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பட்டதாரி பெண்ணை தனது வீட்டிற்கு வரவழைத்து அவருடன் உல்லாசம் அனுவித்து வந்துள்ளார். பின்னர் அந்த பட்டதாரி பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியபோது அதற்கு மகேஷ் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இது குறித்து அந்த பெண் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார், அதன் பேரில் மகேசை போலீசார் கைது செய்தனர். மேலும் இவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் சங்கீதா, தந்தை ரமேஷ், அக்காள் சுஜிதா, மாமா வாசு ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com