சென்னையில் ஸ்கேன் எடுக்க சென்ற பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் - இளைஞர் கைது

ஸ்கேன் எடுக்க சென்ற பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் ஸ்கேன் எடுக்க சென்ற பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் - இளைஞர் கைது
Published on

சென்னை,

சென்னை புழல் பகுதியை சேர்ந்த 47 வயது பெண் ஒருவர், கொளத்தூர் ரெட்டேரி பகுதியில் உள்ள தனியார் ஸ்கேன் மையத்தில் சி.டி.ஸ்கேன் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணிடம் ஸ்கேன் மையத்தில் பணியில் இருந்த இளைஞர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அப்பெண் தரப்பில் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட ஸ்கேன் மையத்தில் பணியில் இருந்த ஜில் கவின் என்ற இளைஞரை கைது செய்தனர். அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com