பச்சிலை மருந்து தருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் நகை பறிப்பு - வாலிபர் கைது


பச்சிலை மருந்து தருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் நகை பறிப்பு - வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 Oct 2025 7:58 AM IST (Updated: 19 Oct 2025 7:59 AM IST)
t-max-icont-min-icon

சுத்தம் செய்வதற்காக கழற்றி வைத்திருந்த சண்முகத்தாயின் தாலிச்சங்கிலி காணாமல் போனது.

நெல்லை,

சுத்தமல்லி அருகே பட்டன்கல்லூர் வடக்கு காலனி தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் மனைவி சண்முகத்தாய் (வயது 47). பால்ராஜ் தூத்துக்குடியில் தங்கி கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். சண்முகத்தாய் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி அவர் வீட்டின் வெளியே கட்டிலில் படுத்திருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த வாலிபர் சண்முகத்தாயிடம் குறி சொல்வதாகவும், கை, கால் வலிக்கு பச்சிலை மருந்து தருவதாகவும் கூறி உள்ளார்.

அதற்காக அவாிடம் தேங்காய் எண்ணெய் கேட்டுள்ளார். இதையடுத்து வீட்டினுள் சென்று அவர் தேங்காய் எண்ணெய் எடுத்து வந்து அந்த வாலிபரிடம் கொடுத்துள்ளார். பின்னர் அந்த வாலிபர் மருந்து செய்து கொண்டு வருவதாக கூறி அங்கிருந்து சென்று விட்டார்.

இந்த நிலையில் அங்கு சுத்தம் செய்வதற்காக கழற்றி வைத்திருந்த சண்முகத்தாயின் தாலிச்சங்கிலி காணாமல் போனது தெரியவந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.20 ஆயிரம் என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் பச்சிலை மருந்து தருவதாக கூறி நூதன முறையில் நகை திருடியது திருப்பூர் மாவட்டம் பெருமாபுதூர் பகுதியை சேர்ந்த வீரப்பன் மகன் அய்யனார் (30) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

1 More update

Next Story