கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் அருகே இளைஞர் சடலம் மீட்பு.. பரபரப்பு

முகத்தில் செலோடேப் சுற்றிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் அருகே இளைஞர் சடலம் மீட்பு.. பரபரப்பு
Published on

சென்னை,

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்குக்கு சென்னை அக்கரை கடற்கரை பகுதியில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது.

இந்நிலையில் அவரது வீட்டின் பின்புறம் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முகத்திலும் வாயிலும் செலோடேப் சுற்றிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தகவலறிந்த நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகே அவரது இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் சடலம் அருகே கிடந்த பையை சோதனை செய்ததில் அவர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கலையரசன் (வயது 33) என்பது தெரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com