மோந்தா புயல்: சென்னையில் மழை குறையும்


மோந்தா புயல்: சென்னையில் மழை குறையும்
x

ஆந்திராவை ஒட்டிய பகுதிகளில் மாலை வரை மழை இருக்கும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

சென்னை,

வங்கக்கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல், தீவிர புயலாகவே இன்று மாலை அல்லது இரவில் கரையைக் கடக்கிறது. புயலின் வேகம் மணிக்கு 12கி.மீ. ஆக குறைந்துள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே மோந்தா புயல் கரையைக் கடக்கும்போது சென்னையில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், தென்சென்னையில் முதலில் மழை குறையும், வடசென்னையில் படிப்படியாக மழை குறையும் இன்று பிற்பகலுக்குப்பின் மழைக்கான வாய்ப்பு மிகக்குறைவு. ஆந்திராவை ஒட்டிய பகுதிகளில் மாலை வரை மழை இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் கூறியுள்ளார்.

1 More update

Next Story