8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல்


8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா புயல்
x
தினத்தந்தி 26 Oct 2025 9:05 AM IST (Updated: 26 Oct 2025 9:05 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் மோந்தா புயலாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வடகிழக்கு பருவமழையின் முதல் நிகழ்வு புயல் சின்னமாக மாறாமல் ஏமாற்றிய நிலையில், 2-வது நிகழ்வு தற்போது வலுவடைந்து வருகிறது. அந்தவகையில் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்தது. இந்தநிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெற்றிருக்கிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் மோந்தா புயலாக வலுப்பெறும்.

இந்தநிலையில், வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் வடமேற்கில் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு கிழக்கு - தென் கிழக்கு திசையில் 790 கி.மீ தூரத்தில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது.

தாழ்வு மண்டலம் நாளை மோந்தா புயலாக வலுப்பெற்று நாளை மறுநாள் ஆந்திராவின் காக்கி நாடா அருகே நாளை மறுநாள் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 90-100 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story