இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்


இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
x

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என 21 மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து,இன்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வட கிழக்கு திசையில் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளை கடந்து நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் இரவு 7 மணி வரை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி , கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி , கோயம்புத்தூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, நீலகிரி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, வேலூர் , விருதுநகர் , செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story