புயலாகவே சென்னையை நெருங்கும் டிட்வா: வானிலை மைய தென் மண்டல தலைவர்

சென்னை புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது
புயலாகவே சென்னையை நெருங்கும் டிட்வா: வானிலை மைய தென் மண்டல தலைவர்
Published on

சென்னை,

வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வங்ககடலில் மையம் கொண்டுள்ள டிட்வா புயல் மணிக்கு 10 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. டிட்வா புயல் மணிக்கு 10 கி.மீட்டர் தூரத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்கிறது. சென்னைக்கு 350 கி.மீட்டர் தூரத்தில் தெற்கு திசையில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது. புதுச்சேரிக்கு 250 கி.மீட்டர் தொலைவிலும் காரைக்காலுக்கு 150 கிமீ தொலைவிலும் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது.

தொடர்ந்து வடக்கு வடமேற்கு திசையில் நகரும் டிட்வா புயல் வட தமிழ்நாட்டின் கடலோரத்தை ஒட்டி செல்லும். டிட்வா புயலாகவே சென்னையை நெருங்கும். கரையைக் கடக்காது. கடலோரத்தை ஒட்டி செல்லும் என்றார். இதற்கு முன்பு டிட்வா புயல் சென்னையை நெருங்கும் போது தாழ்வுமண்டலமாக வலுவிழக்கும் என முன்பு கூறப்பட்டு இருந்த நிலையில் தற்போது புயலாகவே தென்மேற்கு வங்க கடலை அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com