4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்


4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்
x

வளிமண்டலத்தில் கிழக்கு திசை காற்று அடுத்த 48 மணி நேரத்தில் (நாளைக்குள்) வீச தொடங்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


சென்னை,


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 16-ந்தேதி முதல் 18-ந்தேதிக்குள் தொடங்குவதற்கான சாத்தியம் காணப்படுகிறது என வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் அறிவித்து இருந்தது. இதனால், தீபாவளி அன்று மழை பெய்ய கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வளிமண்டலத்தில் கிழக்கு திசை காற்று அடுத்த 48 மணி நேரத்தில் (நாளைக்குள்) வீச தொடங்கும் என்றும் அதனால், வடகிழக்கு பருவமழை 16-ந்தேதி (நாளை மறுதினம்) தொடங்க வாய்ப்பு உள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பருவமழை தொடங்க உள்ள சூழலில், நாளை முதல் வருகிற 21-ந்தேதி வரை ஒரு வாரத்துக்கு தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், இது பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கான மழையாக இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

1 More update

Next Story