சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு


சென்னையில்  இன்று  ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
x

தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்

சென்னை,

சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. மதுரை விமான நிலையம் 104.36 டிகிரி (40.2 செல்சியஸ்), மதுரை நகரம் 102.92 டிகிரி (39.4 செல்சியஸ்), கடலூர் 100.93 டிகிரி (38.3 செல்சியஸ்), பரங்கிப்பேட்டை 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்), திருச்சி 100.58 டிகிரி (38.1 செல்சியஸ்), சென்னை மீனம்பாக்கம் 100.22 டிகிரி (37.9 செல்சியஸ்), ஈரோடு 100.04 டிகிரி (37.8 செல்சியஸ்) ஆகிய 7 இடங்களில் வெயில் சதம் அடித்து இருந்தது.

இதில் மதுரையில் இயல்பைவிட 3 டிகிரி வரையில் வெப்பம் உயர்ந்து காணப்பட்டது. சென்னையில் கடந்த 2 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது. கடல் காற்று நிலப்பகுதிக்குள் வராத காரணத்தினால் இந்த நிலை இருந்தது. ஆனால் நேற்று கடல் காற்று ஓரளவுக்கு வந்ததால், வெப்பம் சற்று குறைந்ததை உணர முடிந்தது.

1 More update

Next Story