சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை

மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
சென்னை,
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் , சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது . எழும்பூர், சென்டிரல் , பாரிமுனை, மெரினா, கிண்டி, ஆலந்தூர், சேப்பாக்கம், அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் (மழை பெய்வதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
Related Tags :
Next Story






