நெல்லை: கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து மூதாட்டி உயிரிழப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
சென்னை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் குறிச்சி பாண்டியாபுரம் பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்தது. கனமழையின் போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உள்ளே படுத்திருந்த மாடத்தி அம்மாள் (வயது 70) என்ற மூதாட்டி படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பத்தினர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மூதாட்டி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






