நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...!

சென்னை உள்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது
நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...!
Published on

தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்ட கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இன்று இடி,மின்னலுடன் கூடிய லேசனது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நெல்லை, கன்னியாகுமரியிலொ ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், 12 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை, தேனியில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, சென்னை, செங்கல்பட்டு , கடலூர், காஞ்சிபுரம், மதுரை, ராமநாதபுரம், தென்காசி, திருவள்ளூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசன மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com